பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு
பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த ஜூன் 15ந்தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து தேச பாதுகாப்பு நலன்களை கவனத்தில் கொண்டு மத்திய அரசு டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு தடைவிதித்துள்ள 118 செயலிகளின் விபரம்:-