ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2020-09-02 10:31 GMT
புதுடெல்லி,

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய பிரகாஷ் ஜவடேகர், “ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்த மிஷன் கர்மயோகி திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்