ராஜஸ்தான்; பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ஆளுநருடன் முதல்வர் அசோக் கெலாட் சந்திப்பு
ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல் மந்திரி அசோக் கெலாட் சந்தித்துப் பேசினார்.
ஜெய்பூர்,
ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதல் மந்திரியாக இருந்த அசோக் கெலாட் போர்க்கொடி தூக்கினார். தொடர்ந்து, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் தனியே முகாமிட்டுள்ளார். இதற்கு மத்தியில், சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதை எதிர்த்து சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் , சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்டி, தனது அரசுக்கு உள்ள பெரும்பான்மையை காட்ட அசோக் கெலாட் முனைப்பு காட்டி வருகிறார். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை காட்டி, சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அசோக் கெலாட், ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் காத்திருந்தனர். அப்போது, சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.