செயலாளருக்கு கொரோனா இமாசலபிரதேச முதல்-மந்திரி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்

இமாசலபிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரியாக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய் ராம் தாக்கூர் இருந்து வருகிறார்.

Update: 2020-07-23 21:00 GMT
சிம்லா,

இமாசலபிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரியாக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ஜெய் ராம் தாக்கூர் இருந்து வருகிறார். இந்த நிலையில் அங்கு பா.ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல அம்மாநில தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் துணை செயலாளருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்களுடன் ஜெய் ராம் தாக்கூர் தொடர்பில் இருந்ததால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முதல்-மந்திரி அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் என 36 பேருக்கும், தலைமை செயலகத்தில் பணிபுரியும் 27 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த நிலையில், முதல்-மந்திரி, அவருடைய மனைவி மற்றும் மகள்கள் உள்பட யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்-மந்திரி ஜெய் ராம் தாக்கூர் குடும்ப உறுப்பினர்களுடன் தன்னைத்தானே ஒரு வாரத்துக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு இன்னும் 5 அல்லது 6 நாட்கள் கழித்து மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்