கேரள அரசியலில் புயலை கிளப்பும் வழக்கு: பொன்னை அடைய பெண்ணின் துணையோடு நடந்த சதி
கேரள அரசியலில் சர்ச்சையும், பரபரப்பும் ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகள் போல் எப்போதும் உடன் இருந்து கொண்டே இருக்கும்.
திருவனந்தபுரம்,
கேரள அரசியலில் சர்ச்சையும், பரபரப்பும் ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகள் போல் எப்போதும் உடன் இருந்து கொண்டே இருக்கும். சரிதா நாயர் என்ற பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை கடந்த காங்கிரஸ் ஆட்சியையே கவிழ்த்து விட்டது. அதுபோல் தற்போதும் ஒரு பெண்ணால் அந்த மாநில அரசு சர்ச்சை சுழலில் சிக்கி தவிக்கிறது.
அந்த பெண் பெயர் ஸ்வப்னா. கேரள அரசின் முக்கிய பதவியில் பணியாற்றிய அவர்தான் தற்போது கேரள மண்ணை ஆளும் அரசுக்கே பெரும் தலைவலியாக மாறி இருக்கிறார்.
அப்படி என்னதான் நடந்தது... சிக்கிய கடத்தல் தங்கம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மணக்காடில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் உள்ளது. தூதரகத்துக்கு வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வரும் பொருட்களுக்கு சோதனையில் இருந்து விலக்கு உள்ளது. இது தூதரகத்துக்குரிய தனியுரிமை ஆகும். இதை சட்டவிரோதமாக பயன்படுத்தி அதிகாரிகள் துணையுடன், தூதரகத்தின் பெயரில் வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் மூலம் தங்ககட்டிகள் கடத்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஓராண்டு காலமாக தொடர்ந்து நடந்துள்ளது.
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சரக்கு விமானத்துக்கு தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல் ஒன்றை சுங்கத்துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் முன்னிலையில் பிரித்து சோதனை செய்தனர். அப்போது அதற்குள் இருந்த 30 கிலோ தங்கக்கட்டிகளை பார்த்து அதிகாரிகள் திடுக்கிட்டனர். உடனே அவர்கள் அந்த 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
சூடுபிடித்த விவகாரம்
இதற்கிடையே விமான நிலையத்தில் சிக்கிய தங்ககட்டிகளை விடுவிக்குமாறு முதல் மந்திரி அலுவலகத்தில் இருந்து முக்கிய அதிகாரி ஒருவர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியானது. இதனால் இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது. மேலும் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டதால் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தங்ககட்டிகள் கடத்தலில் தொடர்புடையதாக தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தங்ககட்டிகள் கடத்தலில் சந்தீப்நாயர் என்பவர் மூளையாக செயல்பட்டதும், அவர், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு 3 கிலோ தங்கம் பிடிபட்ட போது கே.டி.ரமீஸ் என்பவருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
ஸ்வப்னாவுடன் பழக்கம்
அந்த வழக்கில் இருந்து வெளியே வந்த சந்தீப் நாயருக்கு, சரித்குமார் மற்றும் அவர் மூலம் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) கட்டமைப்பு நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்வப்னாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்டு தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் பார்சல்களில் தங்ககட்டிகளை கடத்த திட்டமிட்டு செயல்படுத்தி உள்ளனர். தூதரகத்தின் பெயரில் வரும் பொருட்களுக்கு சோதனை இருக்காது என்பதால் தங்ககட்டிகளை கடத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வந்ததாக தெரிகிறது. ஆனால் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சரக்கு விமானத்தில் தூதரக பெயரில் வந்த பார்சல்களை சுங்கத் துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்திய போது தங்ககட்டிகள் சிக்கின.
இதைத்தொடர்ந்து நடந்தப்பட்ட விசாரணையில், கடத்தல் புள்ளிகளுடன் அதிகாரி ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கேரள அரசு பணியிடை நீக்கம் செய்தது. எங்கே சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்தில் ஸ்வப்னா குடும்பத்துடன் தலைமறைவானார். முன்னதாக அவர், தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ரூ.15 லட்சம் அடங்கிய பையை கொடுத்து உள்ளார். அந்த நபர் மற்றும் பையில் இருந்த பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. அதுவும் விசாரணைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முக்கிய அதிகாரி
மேலும் இந்த விவகாரத்தில் கேரள முதல்- மந்திரியின் முதன்மை செயலாளரும், ஐ.டி. துறை செயலாளருமான சிவசங்கரன் மீது சந்தேகம் எழுந்தது. இதனால் அவர், முதல் -மந்திரியின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர், குடிமைப்பணி விதிகளை மீறியதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே தங்ககட்டிகள் கடத்தல் தொடர்பான மர்மங்கள், முக்கிய புள்ளிகளின் தொடர்புகளை கண்டறிய வேண்டும் என்பதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. உடனே என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, பெங்களூருவில் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது அவருடைய கூட்டாளியான சந்தீப் நாயரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் 3-வது குற்றவாளியான துபாய் தொழில் அதிபர் பைசல் பரீத், துபாயில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் தான் ஒவ்வொரு முறையும் துபாயில் இருந்து தங்ககட்டி பார்சல்களை அனுப்பி உள்ளார். அதை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சரித்குமார் டெலிவரி எடுத்துள்ளார்.
திடுக்கிடும் தகவல்கள்
அதற்கு முன்னோட்டமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் துபாயில் இருந்து போலி முத்திரையை பயன்படுத்தி ஒரு டம்மி பார்சலை அனுப்பி சோதனை செய்துள்ளனர். அது, தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் துணையுடன் வெற்றிகரமாக டெலிவரி ஆனதால் தொடர்ந்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த ஓராண்டு காலமாக இதுவரை மொத்தம் 230 கிலோ தங்ககட்டிகள் கேரளாவுக்கு கடத்தி இருப்பதும், அவற்றை, கேரளா, தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் யார்? யார்? வாங்கினார்கள் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மேலும் துபாயில் கைதான பைசல்பரீத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தங்கம் கடத்தல் விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அரசும் தூதரகத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தல் தொடர்பாக கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் மீது குற்றம் சாட்டி பிரதமர் மோடிக்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ்சென்னிதலா கடிதம் எழுதினார். மேலும் முதல்-மந்திரி பதவி விலக வேண்டும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மந்திரிக்கு தொடர்பா?
இந்த வழக்கில் கேரள மந்திரி ஒருவரின் தலையீடு இருப்பதை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். எனவே அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அந்த மந்திரியின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் வெளியுறவுத்துறை மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை களத்தில் இறங்கி உள்ளன. தங்க கட்டிகள் கடத்தல் வழக்கில் ஒவ்வொரு நாளும் பகீர் தகவல்கள் வெளியாகி வருவது கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு முதல்- மந்திரி அறிவிப்பு
இந்த விவகாரம் குறித்து கேரளமுதல் -மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-
பெண் அதிகாரிக்கு, அரசு உயர் பதவி வழங்கப்பட்ட விவகாரம் என் கவனத்திற்கு வர வில்லை. அவர் நியமனம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். மேலும் தங்கம் வந்த பார்சல் கேரள அரசுக்கு வரவில்லை. ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு தான் வந்துள்ளது. எனவே கேரள அரசு தங்கம் கடத்தலுக்கு பொறுப்பேற்க முடியாது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கேரள அரசு காப்பாற்றாது. என்.ஐ.ஏ. விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுக் கும். தீவிரவாதிகளுக்கு கடத்தல் பணம் நிதியாக வழங்கப்பட்டு உள்ளதாக என்.ஐ.ஏ. கூறியுள்ளது முக்கியமானதாக பார்க்கப் படுகிறது. முதல்- மந்திரி அலுவலகத்திலும் விசாரணை நடத்தலாம். அதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
களங்கத்தை நீக்க கடிதம்
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ்சென்னிதலா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தங்கம் கடத்தல் தொடர்பாக விசார ணையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமீரகத்துடனான நீண்டகால நட்புக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசில் பணியாற்றும் அதிகாரிகளின் உதவியுடன் சர்வதேச தங்கம் கடத்தல் கும்பல் தூதரக தனியுரிமையை தவறாக பயன்படுத்தி இருக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கும் விவகாரம். இதில் முதல்-மந்திரி அலுவலக தொடர்பு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடிகர், நடிகைகளிடம் விசாரணை
கேரளாவில் தயாரிக்கப்படும் பல படங்களுக்கு தங்ககட்டி கடத்தலில் தொடர்புடைய பைசல்பரீத் மற்றும் ஸ்வப்னா ஆகியோர் பணம் முதலீடு செய்தது என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதற்கிடையே நடிகை பூர்ணாவை மிரட்டியதாக கைதான கும்பலுக்கும், தங்கம் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பைசல்பரீத் மூலம் தயாரிக்கப்பட்ட படங்கள் எவை? அதில் நடித்த நடிகர், நடிகைகளின் பட்டியலை தயாரித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது. மேலும் ஸ்வப்னா நடத்திய இரவு நேர விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரபலங்கள், முக்கிய புள்ளிகள் யார்? யார்? என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டலா?
கேரளாவில் தங்க கட்டிகள் கடத்தல் மூலம் தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டல், தீவிரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், தீவிரவாத செயலுக்கான கூட்டுச்சதி ஆகியவற்றுக்கு பயன்படுத்தியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்வப்னா, சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இப்போது வரை ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 22 முறைகளாக 230 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்யவும், அதில் தொடர்பு உடையவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்ககட்டி கடத்தலில் 20 ஹவாலா கும்பல்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரி ராஷித் சலாமி விமானம் மூலம் துபாய்க்கு தப்பி சென்று விட்டார். இந்த நிலையில் அவருடைய பாதுகாவலர் ஜெய்கோஷ் தற்கொலைக்கு முயன்றார். அவர், கடந்த 2015-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் தொடங்கப்பட்ட போது, துணை தூதருக்கு பாதுகாவலராக நியமிக்கப்பட்டார். அதற்கு மத்திய உள்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரமும் சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது.