மராட்டிய ஜவுளித்துறை மந்திரிக்கு கொரோனா
அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், டாக்டர்களையும் கொரோனா தாக்கி வருகிறது.
மும்பை,
இந்தியாவிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், டாக்டர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. அங்கு ஏற்கனவே 3 மாநில மந்திரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குபின்னர் அவர்கள் குணம் அடைந்தனர்.
இந்த நிலையில் மராட்டிய மாநில ஜவுளித்துறை மந்திரி அஸ்லாம் ஷாயிக் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். எனவே என்னுடன் தொடர்புடையவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஸ்லாம் ஷாயிக், மும்பையின் மேற்கு மலாத் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். கொரோனா காரணமாக அவர் வீட்டில் இருந்து தனது அமைச்சரக பணிகளை தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.