இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: மேலும் 40,425 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மேலும் 40,425 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Update: 2020-07-20 04:25 GMT
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 40,425 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,77,618 லிருந்து 11,18,043 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 681 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,816 லிருந்து 27,497ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,77,423 லிருந்து 7,00,087ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,90,459 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்