கொரோனா, சீனா அத்துமீறல் பற்றி பா.ஜனதா அரசு பொய் சொல்லி வருகிறது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கொரோனா, சீனா அத்துமீறல் பற்றி பா.ஜனதா அரசு பொய் சொல்லி வருகிறது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-07-19 20:31 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்‘ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பொய்களை நிறுவனமயமாக்கி விட்டது. முதலில், கொரோனா பிரச்சினையில், பரிசோதனைகளை குறைத்துக்கொண்டு, பலி எண்ணிக்கை குறித்து பொய் சொன்னது. பின்னர், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை புதிய கணக்கீட்டு முறையை பயன்படுத்தி கணக்கிட்டு பொய் சொன்னது. தற்போது, ஊடகங்களை அச்சுறுத்தி, சீன அத்துமீறல் குறித்து பொய் சொல்கிறது.

இப்படி பொய்களை நிறுவனமயமாக்கி விட்டது. விரைவில் இந்த மாயை அகலும். இந்தியா அதற்கான விலையை கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்