விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் திகார் சிறையில் உள்ள குற்றவாளி தற்கொலைக்கு முயற்சி
விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் திகார் சிறையில் உள்ள குற்றவாளி சோனு பஞ்சாபன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
புதுடெல்லி:
சோனு பஞ்சாபன், அவரது கூட்டாளி சந்தீப் பெட்வாலுடன் விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் திகார் சிறையில் உள்ளார். ஆனால் அவரின் தண்டனை விவரம் அறிவிக்கப்பபடவில்லை.
இந்த நிலையில் இன்று சோனு பஞ்சாபன் திகார் சிறைச்சாலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
டெல்லியின் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோனுவின் உடல்நிலை மோசமடைந்ததால் உடனடியாக தீன் தயாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்களின் கூற்றுப்படி, அவர் இப்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார் என்று கூறப்படுகிறது.