கொரோனா தொற்றை தடுக்க அரசு உறுதியான, திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - ராகுல்காந்தி

இந்தியாவில் இதே நிலைமை நீடித்தால் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனாவால் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என ராகுல்காந்தி கூறி உள்ளார்.

Update: 2020-07-17 06:43 GMT
புதுடெல்லி

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

நாட்டில் கொரோனா பாதிப்பு இந்த வாரம் 10 லட்சத்தை தாண்டும் என கடந்த 14ம் தேதி தாம் பதிவிட்டிருந்ததாகவும், அதேபோல்  தற்போது 10 லட்சத்தை கடந்து விட்டதாகவும்,

நாட்டில் இதே வேகத்தில் கொரோனா தொற்று பரவல் இருந்தால், ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் இந்தியாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவர் எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 

ஆதலால் கொரோனா தொற்று பரவலை தடுக்க உறுதியான திட்டத்தை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்