இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 34 ஆயிரத்து 956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவால் மேலும் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 25 ஆயிரத்து 602ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 3 லட்சத்து 42 ஆயிரத்து 473 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 6 லட்சத்து 35 ஆயிரத்து 757 பேர் குணமாகியுள்ளனர். மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 281ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 194ஆகவும் உயர்ந்துள்ளது.