சிவில் சர்வீசஸ் நேர்முகத்தேர்வு: விண்ணப்பதாரர்களுக்கு மாநிலங்களிலேயே மருத்துவ பரிசோதனை - மத்திய அரசு புதிய அறிவிப்பு

சிவில் சர்வீசஸ் நேர்முகத்தேர்வில் விண்ணப்பதாரர்களுக்கு மாநிலங்களிலேயே மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2020-07-15 18:38 GMT
புதுடெல்லி,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு, 3 கட்டங்களாக நடக்கிறது. இறுதிக்கட்ட தேர்வான நேர்முகத்தேர்வு, வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. 

வழக்கமாக, நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் நல்ல மனநிலையிலும், உடல் நிலையிலும் இருப்பதை உறுதி செய்வதற்காக, மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அதிலும், டெல்லியில் உள்ள சில குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகளில்தான் இச்சோதனை நடத்தப்படும். 

ஆனால், தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு, இந்த விதிமுறைகளில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதன்படி, டெல்லி ஆஸ்பத்திரிகளுடன், அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சில அரசு ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்