கொரோனா பாதிப்பு கணிசம் ஆக குறைவு; அனைத்து கட்சிகளுக்கும் டெல்லி முதல் மந்திரி நன்றி

டெல்லியில் கொரோனா பாதிப்பு கணிசம் ஆக குறைந்து உள்ளதற்கு அனைத்து கட்சிகளுக்கும் டெல்லி முதல் மந்திரி நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.

Update: 2020-07-15 09:28 GMT
புதுடெல்லி,

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, டெல்லியில் ஜூலை 15ந்தேதி வரை 2.25 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என்று திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

ஆனால், கூட்டு முயற்சி காரணமாக, கணிக்கப்பட்டதற்கு பாதி அளவிலேயே பாதிப்புகள் உள்ளன.  இன்று டெல்லியில் 1.15 லட்சம் பாதிப்புகள் உள்ளன.  கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக டெல்லி அரசு தனித்து போராட முடிவு செய்திருக்குமென்றால், நாங்கள் தோல்வியையே அடைந்திருப்போம்.

அதனாலேயே, மத்திய அரசு, என்.ஜி.ஓ.க்கள் மற்றும் மத அமைப்புகள் உள்பட அனைவரிடமும் உதவி கேட்டோம்.  பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.

மேலும் செய்திகள்