இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,637 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,49,553 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் தொடர்ந்து 9-வது நாளாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அசுர வேகம் காட்டி உள்ளது. தினமும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்து உள்ளது. நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் கொரோனா பரவல் உச்சம் தொடுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,20,916லிருந்து 8,49,553ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,15,386லிருந்து 5,34,621ஆக உயர்ந்துள்ளது எனவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,123லிருந்து 22,674ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 28,637 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை 22,674 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 551 உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.