லடாக் மோதல் குறித்து அமெரிக்க மந்திரியுடன் ராஜ்நாத்சிங் தொலைபேசியில் பேச்சு
லடாக் மோதல் குறித்து அமெரிக்க மந்திரியுடன் ராஜ்நாத்சிங் தொலைபேசியில் பேசினார்.
புதுடெல்லி,
அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் டி.எஸ்பரை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருதரப்பு ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. அப்பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ராஜ்நாத்சிங் எடுத்துரைத்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.