தன்னைப் போன்று பிறர் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார் - ராகுல் காந்தி

தன்னை போன்று பிறர் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Update: 2020-07-08 13:58 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்திய-சீன எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதல் மற்றும் அதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்டைகள் ஆகியவற்றில் மத்திய அரசு சிறப்பாக செயல்படவில்லை என குற்றம் சாட்டி வருகிறார்.

மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தனது டுவிட்டர் பதிவில் இன்று நாட்டில் உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடும் நிதிச்சுமையில் தவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பாகவே ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நாட்டில் ஏற்படவுள்ளது குறித்து தான் எச்சரிக்கை செய்ததாகவும், மத்திய அரசு அதை அலட்சியம் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தன்னை போன்று பிறர் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருப்பதாகவும் அதை வைத்து அவர்களை மிரட்டலாம் என்றும் பிரதமர் மோடி நினைப்பதாக கூறியுள்ள அவர், உண்மைக்காக போராடுபவர்களுக்கு எந்த விலையும் இல்லை என்பதை பிரதமர் புரிந்து கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்