பீகார் முதல் மந்திரியின் மருமகளுக்கு கொரோனா; அரசு இல்லத்தில் குவிந்த டாக்டர்கள்

பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமாரின் மருமகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-07-07 15:15 GMT
பாட்னா,

பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமாரின் அரசு இல்லத்தில் அவரது மருமகள் தங்கியிருந்துள்ளார்.  இந்த நிலையில், அவரது மருமகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் அவர் மருத்துவமனை ஒன்றில் தனி வார்டில் சேர்க்கப்பட்டார்.  முதல் மந்திரி அலுவலகம் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து பாட்னா மருத்துவ கல்லூரி பிறப்பித்த உத்தரவின்படி, 6 டாக்டர்கள், 3 செவிலியர்கள் ஆகியோர் முதல் மந்திரியின் அரசு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.  இது தவிர்த்து வெண்டிலேட்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது இல்லம் மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.  பீகார் சுகாதார துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவின்படி, பாட்னா மருத்துவ கல்லூரி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்