இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கேரளாவில் இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொழிஞ்சாம்பாறை,
கண்ணூர் அருகே, இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் சுற்றிய இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கவிகோத்தகிரி போலீஸ் நிலையத்தில் சினு என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அங்கு செரின் என்பவர் ஜீப் டிரைவராக உள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் இன்ஸ்பெக்டர் சினு போலீஸ் ஜீப்பில் கண்ணூர் பகுதியில் சுற்றி வந்தார். டிரைவர் செரீன் ஜீப்பை ஓட்டினார். அப்போது அவர்களுடன் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும் இருந்தார். நீண்ட நேரமாகவே ஜீப் அந்த பகுதியிலேயே சுற்றி வந்தது.
இந்தநிலையில் சற்று நேரம் கழித்து அந்த ஜீப் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றது. அங்கு வைத்து அந்த இளம்பெண்ணும், இன்ஸ்பெக்டரும் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை அவர்களுக்கு தெரியாமல் அந்த வழியாக வந்த ஒருவர் வீடியோவாக எடுத்து கண்ணூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேம்ராஜனுக்கு அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அவர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரஜிவிக்கு உத்தரவிட்டார். விசாரணையில் இன்ஸ்பெக்டர் சினு சம்பவத்தன்று இளம்பெண்ணுடன் ஜீப்பில் சுற்றித்திரிந்ததும், பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக சென்று பேசியதும் தெரியவந்தது.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேம்ராஜன், இன்ஸ்பெக்டர் சினுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.