இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை தற்போது 4 லட்சத்தை கடந்துள்ளது
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
இந்த சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,73,165 ஆக உள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 613 பேர் உயிரிழந்ததால், கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை தற்போது 4 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 9 ஆயிரத்து 083 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 2,44,814 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டிய மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 64 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து, 8 ஆயிரத்து 82 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர்.
டெல்லியில் 97 ஆயிரத்து 200 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 68 ஆயிரத்து 256 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர்.
குஜராத்தில் 35 ஆயிரத்து 312 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 25 ஆயிரத்து 406 பேர் குணமடைந்து உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் இதுவரை 26 ஆயிரத்து 554 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 18 ஆயிரத்து 154 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.