பிரதமர் மோடி பார்வையிட்ட லடாக் ராணுவ ஆஸ்பத்திரியில் வசதிகள் குறைபாடா? ராணுவம் விளக்கம்
பிரதமர் மோடி ராணுவ ஆஸ்பத்திரிக்கு சென்று கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
புதுடெல்லி,
லடாக் எல்லைக்கு நேற்று முன்தினம் திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பின்னர் லேயில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு சென்று கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதனைத் தொடர்ந்து லேயில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் போதிய வசதிகள் எதுவும் கிடையாது என்றும் மோடியின் வருகையால் ஆஸ்பத்திரி நவீனமயமாக்கப்பட்டதாகவும் கருத்துகள் பகிரப்பட்டன.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “லேயில் பிரதமர் மோடி பார்வையிட்ட ராணுவ ஆஸ்பத்திரி வசதியின் நிலை குறித்து சில பகுதிகளில் தீங்களைக்கும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நமது துணிச்சலான ஆயுதப்படைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் தவறான தகவல்கள் முன்வைக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. ஆயுதப்படைகள் தங்கள் பணியாளர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கின்றன” என கூறப்பட்டுள்ளது.