மேற்கு வங்காளத்தில் குண்டு வெடித்து 2 பேர் பலி

மேற்குவங்காளத்தின் முர்சிதாபாத் மாவட்டம் சரடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சிலர் வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-04 21:06 GMT
கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் முர்சிதாபாத் மாவட்டம் சரடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சிலர் வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அரசியல் முன்விரோதம் காரணமாக நாசவேலையில் ஈடுபட சட்டவிரோதமாக வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்