2023-ம் ஆண்டுக்குள் தனியார் ரெயில்கள் இயக்கப்படும் - ரெயில்வே வாரிய தலைவர் தகவல்
2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் தனியார் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் 109 வழித்தடங்களில் 151 நவீன ரெயில்களை தனியார் மூலம் இயக்கும் திட்டத்தை தொடங்க இருக்கும் ரெயில்வே, அதற்கான விண்ணப்பங்களை வரவேற்க இருப்பதாக வந்த தகவல் வெளியானது.
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ரெயில்வே போர்டு வாரிய தலைவர் வி.கே.யாதவ் நேற்று காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் 151 ரெயில்களை தனியார் மூலம் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதாவது இந்திய ரெயில்வே இயக்கும் 2,800 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 சதவீத ரெயில்கள் தனியார் மூலம் இயக்கப்படும். மீதம் உள்ள 95 சதவீத ரெயில்களை இந்திய ரெயில்வே இயக்கும்.
இந்த திட்டத்தில் தனியார் நிறுவனங்களின் முதலீடு ரூ.30 ஆயிரம் கோடியாக இருக்கும். இதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்க இருக்கின்றன.
மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, செகந்திராத், ஜெய்ப்பூர், ஹவுரா, பாட்னா, பிரயாக்ராஜ் சண்டிகார் உள்ளிட்ட 12 பிராந்தியங்களில் தனியார் ரெயில்கள் இயக்கப்படும். சென்னை பிராந்தியத்தில் 16 ரெயில்களும், பெங்களூரு பிராந்தியத்தில் 15 ரெயில்களும், மற்ற பிராந்தியங்களில் தலா 12 ரெயில்களும் இயக்கப்படும்.
ஒவ்வொரு தனியார் ரெயிலிலும் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பெட்டிகள் நவீன தொழில்நுட்பம் கொண்டதாகவும், அதிவேகமாக செல்லும் வகையிலும் இருக்கும். இந்த ரெயில்களில் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் கிடைக்கும்.
தற்போது 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் முடிந்ததும் ரெயில் பெட்டிகள் பராமரிக்கப்படுகின்றன. தனியார் ரெயில்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் கொண்ட ரெயில் பெட்டிகளை 40 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்துக்கு பிறகோ அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ, இரு முறையோ பராமரித்தால் போதும்.
இந்தியாவின் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்த ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். ரெயில் போக்குவரத்தை நடத்தும் தனியார் நிறுவனங்கள் இந்த ரெயில் பெட்டிகளையே வாங்க வேண்டும். பெட்டிகள் பராமரிப்பையும் அவர்களே மேற்கொள்ள வேண்டும்.
தனியார் ரெயில்களின் கட்டணம் மற்றும் உணவு, வைபை வசதி உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். எனவே கட்டணம் விமான கட்டணத்துடன் போட்டியிடக்கூடியதாக இருக்கும். அதாவது விமானம், பஸ் கட்டணம் ஆகியவற்றை மனதில் கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
இதற்கான டிக்கெட்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமும் விற்பனை செய்யப்படும்.
ரெயில் பாதை, நிலையங்கள் உள்ளிட்ட ரெயில்வே கட்டமைப்புகளையும், மின்சாரத்தையும் பயன்படுத்துவற்காக தனியார் ரெயில்களை இயக்குவோர் அரசாங்கத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும். எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறார்களோ அதற்கேற்ப மின்கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக ரெயில் என்ஜினில் மின்சார மீட்டர் பொருத்தப்படும். இதன்மூலம் அவர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.
தனியார் ரெயில்கள் 95 சதவீதம் சரியான நேரத்துக்கு புறப்படுவது, சென்றடைவது உறுதி செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி தனியார் ரெயில்களின் செயல்பாடுகள் அமையவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். தனியார் ரெயில்கள் இயக்கப்படும் போது போதிய சேவைகள் கிடைக்கும் என்பதால் பயணிகள் காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டிய நிலை குறைந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.