மத்தியபிரதேச மந்திரிசபை விஸ்தரிப்பு; 28 பேர் புதிதாக பதவி ஏற்றனர்

மத்தியபிரதேசத்தில் மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டு 28 பேர் புதிதாக பதவி ஏற்றனர்.

Update: 2020-07-02 19:53 GMT
போபால்,

மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, கடந்த மார்ச் மாதம் பதவி விலகியது. அதையடுத்து, சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா அரசு பதவி ஏற்றது. கடந்த ஏப்ரல் மாதம், 5 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இந்நிலையில், நேற்று மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டது. 28 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இவர்களில் 20 பேர் கேபினட் மந்திரிகள், 8 பேர் இணை மந்திரிகள் ஆவர். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவர்னர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சமூக இடைவெளியை பின்பற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய மந்திரிகளில் 12 பேர், காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்த ஜோதிர்ஆதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஆவர். பா.ஜனதா தரப்பில் மந்திரி ஆனவர்களில் யசோதர ராஜே சிந்தியா குறிப்பிடத்தக்கவர்.

மேலும் செய்திகள்