‘கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள்’ - கெஜ்ரிவால் வேண்டுகோள்
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாவை எடுத்து புதிய நோயாளிகளுக்கு செலுத்துவதன் மூலம், அவற்றில் உள்ள ஆண்டிபாடிகளால் நோயாளிகள் விரைவில் குணமடைகின்றனர்.
எனவே இந்த சிகிச்சைக்காக நாட்டிலேயே முதல் முறையாக டெல்லியில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டு உள்ளது. ஐ.எல்.பி.எஸ். ஆஸ்பத்திரியில் திறக்கப்பட்டு உள்ள இந்த வங்கிக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவும் சென்றார்.
பின்னர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘டெல்லியின் புதிய பிளாஸ்மா வங்கியை ஆய்வு செய்தேன். உலக தரத்திலும், நவீன முறையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்மா நன்கொடையாளர்களை ஊழியர்கள் சிறந்த முறையில் கவனிக்கிறார்கள். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முன்னதாக இந்த பிளாஸ்மா வங்கியை அவர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘நீங்கள் கொரோனாவில் இருந்து மீண்டவராக இருந்தால், உங்கள் வயது 18 முதல் 60-க்குள் இருந்து, உடல் எடையும் 50 கிலோவுக்கு மேல் இருந்தால் நீங்கள் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்யலாம்’ எனக்கூறினார். இதற்காக பிளாஸ்மா வங்கிக்கு செல்வதற்கு அரசு வாகன வசதியை ஏற்படுத்தவோ, அல்லது பயணச்செலவை வழங்கவோ செய்யும் எனவும் தெரிவித்தார்.