நாட்டு மக்களின் தரவுகளை பாதுகாக்கவே சீன செயலிகளுக்கு தடை: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
சீன செயலிகளுக்கு தடை விதித்தது டிஜிட்டல் தாக்குதல் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீன ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலையடுத்து, இரு நாட்டு உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை சீனாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில், சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை டிஜிட்டல் தாக்குதல் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். நமது நாட்டு மக்களின் தரவுகளை பாதுகாக்கவே சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.