இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 6,04,641 ஆக உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளதகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 19,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 434 இறப்புகள் பதிவாகி உள்ளன. இதை தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,04,641 ஆக உயர்ந்து உள்ளது.
இதுவரை 3,59,860 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 2,26,947 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 17,834 பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்
நாட்டில் இதுவரை 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நாட்டின் சராசரி கொரோனா பாதிப்பு இன்று காலை 8.34 சதவீதமாக இருந்தது; மீட்பு விகிதம் 59.51 சதவீதமாக இருந்தது என கூறப்பட்டு உள்ளது.