எல்லைப் பிரச்சினை:சீனா நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி ஒப்பந்தங்களை நிறுத்திய மராட்டிய அரசு
எல்லைப் பிரச்சினையில் சீனா நிறுவனங்களுடனான ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்களை மராட்டிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மும்பை
சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் 2.0 என்ற முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் சீனா நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 3 ஒப்பந்தங்கள் கைய்யெழுத்தானது. இந்த நிலையில் எல்லைப் பிரச்சினைகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களை தொடர்ந்து இந்த 3 ஒப்பந்தங்களை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறியதாவது:-
மத்திய அரசுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களுடன் மேலதிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, இதில் சிங்கப்பூர், தென் கொரியா, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் பல இந்திய நிறுவனங்கள் அடங்கும். மற்ற ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.