ஓய்வு பெற்ற வெளியுறவுத்துறை அதிகாரியின் மனைவியை கொன்று நகை, பணம் கொள்ளை

டெல்லியில் ஓய்வு பெற்ற வெளியுறவுத்துறை அதிகாரியின் மனைவியை கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-21 22:42 GMT

புதுடெல்லி,  

தென்மேற்கு டெல்லியின் சப்பார்ஜிங் பகுதியில் வசித்து வருபவர் பி.ஆர்.சாவ்லா (வயது 94). மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி காந்தா (88). நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களது குடியிருப்பில் பாதுகாவலர்களாக வேலை பார்த்து வந்த 4 பேர் அங்கு வந்தனர்.

பின்னர் காந்தாவை கத்தியால் குத்திய அவர்கள், சாவ்லாவை தாக்கினர். பின்னர் படுக்கை அறைக்கு சென்ற 4 பேரும், அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த காந்தா, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களே அதிகாரியின் மனைவியை கொலை செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் செய்திகள்