சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த 76 வீரர்கள் குணமடைந்து வருகின்றனர்; விரைவில் பணிக்கு திரும்புவார்கள்
எல்லையில் சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த 76 வீரர்கள் குணமடைந்து வருகின்றனர்; விரைவில் பணிக்கு திரும்புவார்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 அன்று மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
சீனப் படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த இந்திய ராணுவத்தின் 76 வீரர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களில் யாருக்கும் பெரிய காயங்கள் எதுவும் இல்லை. அவர்கள் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்த வீரர்களில், 18 பேர் லேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்கள் 15 நாட்களுக்குள் தங்கள் பணிக்கு திரும்புவார்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். மீதமுள்ள 56 மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பற்று வருகிறார்கள்.அவர்கள் ஒரு வாரத்தில் பணிக்கு திரும்புவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.