நேபாள நாட்டிற்கு இந்தியா ரூ.37 கோடி நிதி உதவி

நேபாள நாட்டிற்கு இந்தியா ரூ.37 கோடி நிதி உதவி அளித்துள்ளது.

Update: 2020-06-16 14:46 GMT
புதுடெல்லி,

நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் உள்ள புகழ் பெற்ற பசுபதிநாதர் ஆலயத்தில் சுகாதார வசதிகளை ஏற்படுத்த நேபாள நாட்டுக்கு இந்தியா 37 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே, தற்போது பல்வேறு முரண்பாடு நீடித்து வரும் நிலையில் நேபாள நாட்டுக்கு இந்தியா இந்த நிதி உதவியை அளித்துள்ளது. நேபாள்-பாரத் மைத்திரி என்கிற திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்