ஜம்மு-காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தஜிகிஸ்தானை மையமாக கொண்டு ஜம்மு-காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2020-06-16 05:51 GMT
ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 7 மணிக்கு 5.8  ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஏற்பட்டது. மூன்று நாட்களில் ஜம்மு காஷ்மீரை தாக்கிய மூன்றாவது பூகம்பம் இதுவாகும்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பூகம்பம் தஜிகிஸ்தானில் சுமார் 100 கி.மீ ஆழத்தில் இருந்தது. ஸ்ரீநகர், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்கள் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் வாழும் மக்கள் அதிர்வுகளை உணர்ந்தனர். ஜம்முவிலும் லேசான நடுக்கம் ஏற்பட்டது.

நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்