வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட நோயாளிக்கு ‘பிளாஸ்மா’ அளித்து குணப்படுத்தியது கேரளா - கொரோனா சிகிச்சையில் புதிய சாதனை
வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட கொரோனா நோயாளிக்கு ‘பிளாஸ்மா’ சிகிச்சை அளித்து குணப்படுத்தி கேரளா புதிய சாதனை படைத்தது.
கொச்சி,
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் கேரள மாநிலம், தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. அங்கு 2300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில், 1000 பேர் குணம் அடைந்துள்ளனர். 19 பேர் மட்டுமே இறந்துள்ளனர். சுமார் 1300-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவை பொறுத்தமட்டில் பிற மாநிலங்களை விட இங்குள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அற்புதமான சிகிச்சை, உலக தரத்தில் அளிக்கப்படுவதாக அங்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்தவர்கள் கூறி உள்ளனர்.
பிளாஸ்மா சிகிச்சை
இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் பாதித்து, 51 வயதான ஆண் ஒருவர், திரிச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு ‘கன்வேலசென்ட் பிளாஸ்மா கலெக்ஷன் தெரபி’ என்ற சிகிச்சை அளித்து குணப்படுத்தி இருக்கிறார்கள்.
கேரளாவில் இந்த சிகிச்சை அளித்து உயிர் காக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
‘கன்வேலசென்ட் பிளாஸ்மா கலெக்ஷன் தெரபி’ தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை காப்பாற்றும் சிகிச்சையில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்மாவை பயன்படுத்துவதுதான் ‘கன்வேலசென்ட் பிளாஸ்மா கலெக்ஷன் தெரபி’ ஆகும்.
ரேபீஸ் (வெறிநாய்க்கடி), ஹெபாடடிஸ் பி, போலியோ, தட்டடம்மை, இன்புளுவென்சா, எபோலா உள்ளிட்ட பல நோய்களுக்கு இந்த முறையில் குணம் கிடைத்து இருக்கிறது. இது 100 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட முறை ஆகும்.
வென்டிலேட்டரில் வைக்கப்பட்டநோயாளி
இப்போது கொரோனா சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்த சிகிச்சையை சோதனை அடிப்படையில் மேற்கொள்கிறார்கள்.
அந்த வகையில்தான் திரிச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 51 வயதான நபருக்கு, அவர் ஆபத்தான கட்டத்தில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிளாஸ்மா சிகிச்சை அளித்து குணப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த சிகிச்சையானது, உடலுக்கு வெளியே நிகழ்த்தப்படும் ‘அபரெசிஸ்’ தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டதாகும்.
ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவரின் ரத்தத்தை தானமாக பெற்று, அதில் இருந்து பிளாஸ்மாவை ஒரு கருவி பிரித்தெடுத்து நோயாளியின் உடலுக்குள் செலுத்தும்.
கேரள நோயாளியின் நரம்பில் கடந்த வியாழக்கிழமையை பிளாஸ்மாவை செலுத்த தொடங்கினர். வெள்ளிக்கிழமை காலையில் தேவையான அளவு செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதை அந்த திரிச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.ஏ. ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
பாராட்டு
இந்த சிகிச்சையை அந்த ஆஸ்பத்திரியின் மருத்துவம், மாற்று மருந்து, மயக்க மருந்து துறைகளின் டாக்டர்கள் செய்து முடித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தாமாக முன்வந்து பிளாஸ்மா அளித்தவர் டேவிஸ் அந்தோணி என்பவர்தான்.
இதுபற்றி அந்த ஆஸ்பத்திரி ரத்த வங்கி அதிகாரி கூறும்போது, “தானாக முன்வந்து பிளாஸ்மா அளித்த டேவிஸ் அந்தோணி பாராட்டுக்கு உரியவர். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இனி இன்னும் பலர் தாமாக முன் வந்து பிளாஸ்மா அளிப்பார்கள் என்று நம்புகிறோம்” என குறிப்பிட்டார்.
இந்த ஆஸ்பத்திரியில் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுக்கும் ‘அபரெசிஸ்’ கருவி கடந்த மே மாதம்தான் வைக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்மா தானம் வழங்குகிறவர்கள், 48 மணி நேரத்துக்கு பின்னர் மீண்டும் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் சிகிச்சையில் குணம் அடைந்தவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி மிக அதிகமாக ஏற்பட்டு விடும் என்பதால்தான் அவர்களின் ரத்தத்தை தானமாக பெற்று அதில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்கு செலுத்த முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.