இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதமாக உள்ளது - மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது 4வது இடத்தில் உள்ளது. இருப்பினும் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது முறையாகாது என்றும் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 49.95 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 1,54,329 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 7,135 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.