ஹெலிகாப்டரில் கனரக சாதனங்கள் வருகை: சீன எல்லை அருகே சாலை பணி வேகம் பெறுகிறது
இந்தியா-சீனா எல்லை அருகே 65 கி.மீ. தூரத்துக்கு முக்கியமான சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
டேராடூன், -
இமயமலை பகுதியில் உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டத்தில் இந்தியா-சீனா எல்லை அருகே 65 கி.மீ. தூரத்துக்கு முக்கியமான சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.325 கோடி ஒதுக்கீட்டில், கடந்த 2010-ம் ஆண்டு இப்பணி தொடங்கியது. சாலையின் தொடக்கத்திலும், இறுதியிலும் 40 கி.மீ. தூரத்துக்கு மேல் பாறைகள் உடைக்கப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால், நடுவில் உள்ள 22 கி.மீ. தூர பகுதியில், கடுமையான பாறைகள் நிமிர்ந்து நிற்பதால், அவற்றை உடைக்க முடியவில்லை. அதற்காக கனரக சாதனங்களை அந்த பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டுவர கடந்த ஆண்டு எத்தனையோ தடவை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை தோல்வியில் முடிவடைந்தன.
இதனால், சாலைப்பணி தாமதமானது. இந்நிலையில், நேற்று ஹெலிகாப்டர்கள் மூலமாக அந்த சாதனங்கள் வெற்றிகரமாக கொண்டு வந்து இறக்கப்பட்டன. இதன்மூலம், கடுமையான பாறைகளை உடைத்து, விரைவில் சாலை அமைக்க வழி பிறந்துள்ளதாக எல்லை சாலைகள் நிறுவனம் கூறியுள்ளது. 3 ஆண்டுகளில் சாலை பணி முடிவடையும் என்று தெரிவித்தது.