வந்தே பாரத் திட்டத்தில் 1.65 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளனர்; வெளிவிவகார அமைச்சகம் தகவல்

வந்தே பாரத் திட்டத்தில் 1.65 லட்சம் இந்தியர்கள் இன்று வரை நாடு திரும்பி உள்ளனர் என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Update: 2020-06-11 15:19 GMT
புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இதனால், பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது.  ஊரடங்கால், நாடுகளிடையே வான்வழி, தரை வழி போக்குவரத்து முடங்கி உள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் பலரை சொந்த நாட்டுக்கு அழைத்து வரும் பணிக்காக வந்தே பாரத் திட்டம் தொடங்கப்பட்டது.  இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 29 ஆயிரத்து 34 புலம்பெயர் தொழிலாளர்கள், 12 ஆயிரத்து 774 மாணவர்கள் மற்றும் 11 ஆயிரத்து 241 தொழில் புரிவோர் என இன்று வரை 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு திரும்பி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்