கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு வருகிறது

கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மாநில அரசுகளுக்கு உதவ மத்திய குழு வருகிறது.

Update: 2020-06-09 20:30 GMT
புதுடெல்லி, 

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 67 மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகளை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இவை, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளன.

அங்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாநில அரசுகளுக்கு உதவ மத்திய குழுக்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த குழுவில், 2 பொது சுகாதார நிபுணர்கள் அல்லது தொற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் மற்றும் மூத்த இணை செயலாளர் அந்தஸ்து அதிகாரி ஆகிய 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள 67 மாவட்டங்களில், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களும் அடங்கும்.

மேலும் செய்திகள்