முன்னாள் மத்திய மந்திரி அர்ஜூன் சரண் சேத்தி உடல்நல குறைவால் காலமானார்

முன்னாள் மத்திய நீர்வள துறை மந்திரி அர்ஜூன் சரண் சேத்தி உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Update: 2020-06-09 01:07 GMT
புதுடெல்லி,

முன்னாள் மத்திய நீர்வள துறை மந்திரியாக இருந்தவர் அர்ஜூன் சரண் சேத்தி.  ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.  அவருக்கு வயது 79.

அவர், கடந்த 2000ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மந்திரியாக இருந்துள்ளார்.  ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு எட்டு முறை மக்களவை எம்.பி.யாக தேர்வானவர்.  இதேபோன்று ஒடிசா சட்டசபை தேர்தலிலும் அவர் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.

இதன்பின், கடந்த 2019ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய சேத்தி பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.  அவரது மறைவுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்