ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அதிகாலை முதலே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

Update: 2020-06-08 03:42 GMT
ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அதிகாலை முதலே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்தது.

பிஞ்சோரா என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கிய இடத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததில் 4 பயங்கரவாதிகள் சிக்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. பல மணிநேரமாக பயங்கரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

மேலும் செய்திகள்