மத்திய மந்திரி பியூஷ்கோயலின் தாயார் மரணம்

மத்திய மந்திரி பியூஷ்கோயலின் தாயார் நேற்று மரணம் அடைந்தார்.

Update: 2020-06-06 21:00 GMT
புனே, 

மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயலின் தாயார் சந்திரகாந்தா நேற்று மும்பையில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச்சடங்கு நேற்று நடந்தது. பா.ஜனதா மூத்ததலைவரான இவர், மராட்டிய மாநிலம் மட்டுங்கா தொகுதியில் இருந்து 3 முறை எம்.எல.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

சந்திரகாந்தாவின் கணவர் வேத்பிரகாஷ்கோயல் பா.ஜ.க. பொருளாளராக இருந்தவர். மேலும் வாஜ்பாய் மந்திரிசபையில் கப்பல் துறை மந்திரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாயார் மறைவையொட்டி பியூஷ் கோயலுக்கு, தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதுபோல தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இரங்கல் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்