டெல்லியில் வியாபாரிகள் இடையே அதிகரிக்கும் கொரோனா: ரூபாய் நோட்டுகள் மூலம் பரவுகிறதா?
டெல்லி வியாபாரிகள் இடையே கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரூபாய் நோட்டுகள் மூலம் பரவுகிறதா? என அச்சம் எழுந்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நல்வாழ்வுத் துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,334 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 15,311 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாள்களில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி வியாபாரிகள் இடையே கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு ரூபாய் நோட்டுகள் காரணமா என்ற அச்சம் டெல்லிவாசிகளிடையே எழுந்துள்ளது.
டெல்லியின் முக்கிய வர்த்தகங்கள் திறக்க டெல்லியின் ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் பழைய டெல்லி பகுதியிலுள்ள மொத்த வியாபாரிகள் சந்தையில் திடீர் என இரண்டு நாட்களாக கொரோனா பரவல் கூடி விட்டது.
இதனால், பழைய டெல்லி பகுதியின் சந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களிடம் பெறும் ரொக்கத்தொகைகளை தன் உதடுகளின் உமிழ்நீர் தொட்டு வியாபாரிகள் எண்ணுவது காரணம் எனக் கருதப்படுகிறது.
இதை குறிப்பிட்டு வாட்ஸ்அப்பிலும், சமூகவலைதளங்களிலும் ரூபாய் நோட்டுகளை தொட்ட விரல்களை கழுவாமல் உதடுகளை தொட வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து உறுதிசெய்யும்படி அகில இந்திய மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் மத்திய சுகாதாரத்துறை மந்திரியான ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.