ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி
ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
ஆந்திராவில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கான 262 கோடி ரூபாய் மதிப்பிலான ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
தடேப்பள்ளியில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ஆண்டுதோறும் வாகன பிட்னஸ் சான்றிதழ் பெறுவதற்கும் வாகன காப்பீடு பெறவும் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்று ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் தன்னிடம் தெரிவித்தனர்.
அவ்வாறு செய்யாவிட்டால் தினந்தோறும் 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டி இருப்பதாகவும் கூறிய ஓட்டுநர்களின் துயர் துடைக்கவே கடந்த ஆண்டு முதல் இந்தத் திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இத்திட்டத்துக்காக 236 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 262 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
காப்பீட்டு பிரீமியம், உரிம கட்டணம் மற்றும் தொடர்ச்சியான செலவுகளைச் சந்திக்க ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ10,000 வழங்கும் நோக்கில் ஒய்.எஸ்.ஆர் வாகனா மித்ரா திட்டம் 2019 அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.