ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கத்திகுத்து
டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் ஐ.ஐ.டி துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பல் அவரை கத்தியால் குத்தி சென்றது.
புதுடெல்லி:
ஸ்பைஸ்ஜெட் விமானி, விமான கேப்டனாக இருக்கும் யுவராஜ் திவாடியா, அதிகாலை 1 மணிக்கு தனது அலுவலக காரில் பரிதாபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
தெற்கு டெல்லியில் ஐஐடிக்கு அருகே திவாடியா காரை சுமார் 10 பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்திதுப்பாக்கி முனையில் கொள்ளையடித்து உள்ளனர்.
கொள்ளையர்கள் காரைச் சுற்றி வளைத்து கண்ணாடிகளை உடைத்து உள்ளனர். ஒருவர் கைத்துப்பாக்கியால் விமானியின் தலையில் அடித்தார், பின்னர் அந்த நபர்கள் அவரிடம் இருந்த பொருட்களை கொள்ளையடித்தனர்.
கொள்ளையர்கள் தப்பி ஓடுவதற்கு முன்பு, அவர்களில் ஒருவர் கத்தியால் விமானியை தாக்கினார், இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
கும்பல் சென்றதும் விமானி போலீசாரை அழைத்து உள்ளார். அதைத் தொடர்ந்து போலீஸ் குழு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தது. திவாடியா புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தெற்கு டெல்லியில் இரவு நேரத்தில் இது போல் மற்ற கார்களையும் இந்த கும்பல் குறிவைத்து உள்ளது, இந்த சமபவம் இரவில் வேலைக்குச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.