விவசாயிகளுக்கு 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர்

விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்படுவதாக மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

Update: 2020-06-01 11:33 GMT
புதுடெல்லி,

நாடு முழுக்க கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஊரடங்கு உள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பொருளாதார நிலை குறித்து இன்று பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார் .

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் இன்று அமைச்சரவை கூட்டம் நடத்தினார். பொருளாதார சரிவு குறித்து இதில் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது.மத்திய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மந்திரிகள் நிதின் கட்கரி, நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பேட்டி அளித்தனர். இவர்கள் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.

மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

* மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப் பயிறு உள்ளிட்ட பயிர்களுக்கான  குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்கு 50 முதல் 83 சதவீதம் வரை குவிண்டாலுக்கு கூடுதலாக விலை கிடைக்கும்.

* ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல்.

* கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

* சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

*விவசாயிகளுக்கு 50% முதல் 83% வரை குவிண்டாலுக்கு அதிகமாக விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

*குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க மத்திய அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

* ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்