‘இந்திய பெருங்கடலால் இணைந்தோம்; சமோசாவால் ஒன்றுபட்டோம்’ - ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி டுவிட்டரில் செய்தி

இந்திய பெருங்கடலால் இணைந்தோம்; சமோசாவால் ஒன்றுபட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமருக்கு மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-31 23:43 GMT
புதுடெல்லி, 

பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசனும் 4-ந் தேதி காணொலி காட்சி வழியாக சந்தித்து பேச உள்ளனர்.

இதையொட்டி ஸ்காட் மோரீசன் நேற்று சமோசா, மாங்காய் சட்னி படங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். பிரபலமான இந்திய தலைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நெகிழ்ச்சியாக பதில் அளித்திருக்கிறார்.

அதில் அவர், “நாம் இந்திய பெருங்கடலால் இணைந்தோம். சமோசாவால் ஒன்றுபட்டோம்” என கூறி உள்ளார்.

“நாம் கொரோனா வைரசுக்கு எதிராக உறுதியான வெற்றி கொண்டு விட்டு, சமோசாக்களை சாப்பிட்டு மகிழலாம். 4-ந் தேதி உங்களுடனான காணொலி சந்திப்புக்காக எதிர்நோக்கி உள்ளேன்” என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்