ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களுக்கு மே 21 முதல் முன்பதிவு தொடக்கம்

ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களுக்கு மே 21(நாளை) முதல் முன்பதிவு தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-05-20 17:45 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நாள்தோறும், ஏ.சி. அல்லாத 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று அறிவித்தார். டிக்கெட் முன்பதிவு தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

மேலும், வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும் என்றும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் மட்டுமே செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு மே 21(நாளை) முதல் தொடங்கப்படும் என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும்  ஜூன் 1 முதல் இயக்கப்படவுள்ள உள்ள 200 ரயில்களின் பட்டியலையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்