பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு 127 இந்திய கைதிகள் பஹ்ரைனில் இருந்து வருகை
பொது மன்னிப்பு அளிக்கப்பட்ட127 இந்திய கைதிகள் பஹ்ரைனில் இருந்து கொச்சி விமானநிலையம் வந்தனர்.
கொச்சி,
பஹ்ரைன் நாட்டு சிறைகளில் தண்டனை அனுபவித்து வந்த 127 இந்திய கைதிகளுக்கு அந்நாட்டு அரசு பொது மன்னிப்பு அளித்துள்ளது. அவர்களை கல்ப் ஏர்வேஸ் தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு அனுப்பி வைத்தது.
கொச்சியில், வழக்கமான நடைமுறைகளுக்கு பிறகு, 127 பேரும் அங்குள்ள கடற்படை தனிமைப்படுத்தும் முகாமுக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். 14 நாள் தனிமைக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.