உச்சம் தொட்ட கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5242 பேருக்கு நோய்த்தொற்று உறுதி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5242-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-18 04:03 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதும் முதற்கட்டமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 55 நாட்கள் ஆகியுள்ள போதிலும் கொரோனா பாதிப்பு  குறைந்த பாடில்லை.  இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5242-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 157- பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96169 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து  36824- பேர் குணமடைந்துள்ள நிலையில்,  3029 பேர் பலியாகியுள்ளனர்.  ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்