கேரளாவில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல் மந்திரி பினராயி விஜயன்
கேரளாவில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “கேரளாவில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். 10 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பில் 61,855 பேர் வீடுகளிலும், 674 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 497 பேர் குணமடைந்துள்ளனர்” என்று கூறினார்.