கர்நாடகாவில் மே 19 வரை ஊரடங்கு நீட்டிப்பு
கர்நாடகாவில் மே 19 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதுமான 3-ம் கட்ட ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும் நிலையில் வரும் 31ம் தேதி பொது முடக்கத்தை நீட்டிப்பு செய்துள்ளது. 4-ம் கட்ட ஊரடங்கிற்கான வழிகாட்டுநெறிமுறைகளை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில்
பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்படுகிறது. சிவப்பு,மஞ்சள் பச்சை மண்டலங்கள் எவை என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம். மாநிலங்களுக்குள் பேருந்துகளை இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. இருப்பினும் பேருந்துகள் இயக்குவதை அந்த அந்த மாநில அரசுகளே முடிவு செய்யும் என தெரிவித்தது.
இந்தநிலையில் கர்நாடகாவில் மூன்றாவது ஊரடங்கு இன்று முடிவடையும் தருவாயில் மேலும் 2 நாள் நீட்டித்து அம்மாநில அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மே 19 நள்ளிரவு வரை தற்போதுள்ள மூன்றாவது ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,147ஆக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.