ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்கம் அளிக்கப்படும்; மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்கம் அளிக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டு வருகிறார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், அவற்றை உடனடியாக மீண்டும் திறக்க முடியாத சூழலில், ஆன்லைன் கல்விக்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழி கல்வி வழங்க ஊக்குவிக்கப்படுகிறது.
இதற்காக இ-பாடசாலை திட்டத்தின் கீழ் மேலும் 200 பாட புத்தகங்கள் சேர்க்கப்படும். ஏற்கனவே 3 கல்வி சேனல்கள் உள்ள நிலையில், ஆன்லைன் வழி கல்விக்காக மேலும் 12 புதிய கல்வி சேனல்கள் தொடங்கப்படும். புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களுக்காக தனியார் டி.டி.எச். நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.